Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நாற்காலிகளை கொண்டு தாக்கிய இரு தரப்புகள்…. போலீசார் விசாரணை….!!!!

சூரிய திருவிழா நிகழ்ச்சியில் இருதரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள பீகார், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சூரிய திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதைப்போல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சித்கோரா மாவட்டத்தில்  அமைந்துள்ள சூரிய கோவிலில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.மேலும் பக்தர்களின் வசதிக்காக கிழக்கு        ஜாம்ஷெட்பூர் எம்.எல்.ஏ. சர்யூ ராய்  ஆதரவாளர்கள் உதவி குடில்களை அமைத்திருந்தனர். இதனையடுத்து பாஜகவில் உள்ள முன்னாள் முதல் மந்திரி ரகுபர் தாஸ் ஆதரவாளர்கள் குடில்களுக்கு அருகில் ஆடல் பாடலுக்கு ஏற்பாடு செய்தனர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து வாக்குவாதம்  ஒரு கட்டத்தில் மோதலாக  வெடித்தது. இதனையடுத்து இரு தரப்பினரும் அங்கிருந்த நாற்காலிகளை எடுத்து வீசி மாறி மாறி தாக்க தொடங்கினர். இதில் காயமடைந்தவர்களை  அருகில் இருந்தவர்களை மீட்டு  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |