மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு 2 பெண் போலீசாரை அதிரடியாக பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பூந்தோட்டம் பகுதியில் கஸ்தூரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குற்ற வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கஸ்தூரிக்கு திடீரென சிறையில் வைத்து உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறை அதிகாரிகள் கஸ்தூரியை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் கஸ்தூரி மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடி விட்டார்.
இதுக்குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கஸ்தூரி மயிலாடுதுறையில் உள்ள தனது மகள் வீட்டில் தலைமறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கஸ்தூரியை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் கஸ்தூரிக்கு மருத்துவமனையில் பாதுகாப்பாக இருந்த பெண் போலீசார் கோமதி, சந்தியா ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் விஜயகுமார் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.