Categories
மாநில செய்திகள்

பெரும் பரபரப்பு….! தமிழகம் முழுவதும் ”புதிய கடும் கட்டுப்பாடுகள்” அமுலாகிறது …!!

வேகமாக பரவும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கூடுதல் கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று முதல் திரையரங்குகள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள், மதுபான பார்களை செயல்பட அனுமதி இல்லை. புதுச்சேரி தவிர்த்து மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைவரும் இ- பாஸ் வைத்திருப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளில் அழகு நிலையங்கள்,  சலுங்கள் இயங்க அனுமதியில்லை.

பெரிய கடைகள் , ஷாப்பிங் மால்கள், வணிக வளாகங்கள் செயல்படவும் அனுமதியில்லை. உணவகங்கள், டீ கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி. உட்கார்ந்து சாப்பிட அனுமதி இல்லை. ஆனால் , முழு ஊரடங்கு நாட்களை தவிர்த்த மற்ற நாட்களில் மளிகை, காய்கறி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் வழக்கம் போல செயல்படலாம். எந்த ஒரு வழிபாட்டு தளத்திற்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி குடமுழுக்கு மட்டும் நடத்தலாம் என தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது.

Categories

Tech |