மாடுகளை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள உத்திரை கிராமத்தில் கணேசன்- லலிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது வீட்டின் பின்புறம் உள்ள தங்களது நிலத்தில் பசு மாடுகளை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கணேசன் வீட்டின் பின்புறம் கட்டி இருந்த மாடுகளில் 2 மாடுகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த லலிதா உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பசு மாடுகளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் பசு மாடுகளை திருடி சென்றது செம்மலை பகுதியை சேர்ந்த மதுசூதனன்,லோகநாதன் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் மதுசூதனனை கைது செய்து அவரிடம் இருந்த பசு மாடுகளை மீட்டு லலிதாவிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் லோகநாதனை தீவிரமாக தேடி வருகின்றனர்.