Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!… நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அதிகாரியை செருப்பால் தாக்கிய பெண் துணை தலைவர்…. பொது மக்களின் போராட்டம்….!!!!

வட்டார வளர்ச்சி அலுவலரை  தாக்கிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம் ஊராட்சியில் வைத்து நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் சிவகாமி கலியமூர்த்தி, ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற துணை தலைவர் சரண்யா.,கிராம நிர்வாக அலுவலர் ராஜம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் கூட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஊராட்சி மன்ற துணை தலைவர் சரண்யா வட்டார வளர்ச்சி அலுவலரான  ரவிச்சந்திரனை செருப்பை கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரனிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில்  கடந்த சில நாட்களாக ஊராட்சி மன்ற தலைவருக்கும்  சரண்யாவுக்கு முன் விரோதம் இருந்து வந்ததாகவும், ரவிச்சந்திரன் ஊராட்சி மன்ற தலைவருக்கு ஆதரவாக பேசியுள்ளார். இதனால்  ஆத்திரம் அடைந்த  சரண்யா செருப்பால் ரவிச்சந்திரனை தாக்கியது தெரியவந்துள்ளது.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் உடனடியாக சரண்யாவை கைது செய்ய வேண்டும் என  கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஊராட்சி மன்ற தலைவர் சரண்யாவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |