பிரபல நாட்டில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அமெரிக்க நாட்டில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கிறிஸ்துவ புனிதர்களை நினைவு கூறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் கூட்டத்தில் இருந்த ஒரு நபர் திடீரென சரமாரியாக துப்பாக்கியால் கூட்டத்தின் மீது சுட்டுள்ளார். இதனை பார்த்த மக்கள் அனைவரும் அலறி அடித்தபடி ஓடியுள்ளனர்.
மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அங்கிருந்து அந்த நபர் ஓடிவிட்டார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த நபரை வலைவீசி தீவிரமாக தேடி வருகின்றனர்.