பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே நிலையத்திற்கு அருகில் இருக்கும் அண்டார்டிக் பகுதியில் இருந்த பெரிய பாறை ஒன்று பிளந்துள்ளது.
கிட்டத்தட்ட லண்டன் பெருநகரத்தின் அளவிற்கு பிரம்மாண்டமான பனிப்பாறை ஒன்று பிளந்துள்ளது. இந்த பிளவு பிரிட்டனின் halley ஆராய்ச்சி நிலையத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தில் யாரும் இல்லாததால் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .இந்த பனிப்பாறை 1,270 சதுர கி.மீ பரப்பளவும், 150 மீட்டர் தடிமனும் கொண்டது. பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே ,பனிப்பாறையின் நகர்வை ஜிபிஎஸ் மூலம் செயற்கைக் கோளிலிருந்து கண்டறிவதாக கூறப்படுகிறது.
இந்த பனிப்பாறை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பு பிளக்க ஆரம்பித்து இப்போது முழுவதுமாக இரண்டாக பிரிந்துள்ளது. பிரிட்டனின் பனிப்பாறை நிபுணரும் வேல்ஸில் உள்ள ஸ்வான்சீ பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியருமான அட்ரியன் லக்மேன் பனிப்பாறை குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார். மேலும் இந்த உடைந்த பனிப்பாறை எப்போது பல பாகங்களாக பிரியும் என்பது குறித்தும் அவர் மதிப்பிட்டு வருகிறார்.