ரஷ்ய அதிபரின் காரை மதித்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மேற்கிந்திய நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் ரஷியா பொருளாதாரம் சேதம் அடைந்துள்ளது . இதனை சுட்டிக்காட்டி புதின் உடனடியாக பதவியிரக்கம் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புதின் சொகுசு காரில் தனது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது புதின் சென்ற சொகுசு காரின் இடது பக்க முன் பக்க சக்கரத்தின் மீது சில மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர். உடனடியாக கார் அங்கிருந்து கிளம்பியதால் காரில் இருந்து புகைகள் வெளியாகியுள்ளது.
மேலும் கார் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து புதின் வெளியேற்றப்பட்டார். இதுகுறித்து யூரோ வீக்லி நியூஸில் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ரஷ்ய அதிபர் புதினை படுகொலை செய்ய முயற்சி நடந்தது. ஆனால் அவர் அதிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பலரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கான காரணம் என்ன என்பது இன்னும் தெரிய வரவில்லை என கூறியுள்ளது. இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புதின் கடந்த 2017-ஆம் ஆண்டு தன்னை படுகொலை செய்வதற்காக 5 தடவை முயற்சி நடந்ததாகவும், அதில் இருந்து தான் உயிர் தப்பியதாக கூறியது குறிப்பிடத்தக்கது