உக்ரைன் ராணுவ பயிற்சி நிலையத்தின் மீது ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில் 180 வெளிநாட்டு கூலிப்படையினர் பலியாகி உள்ளனர்.
உக்ரைனில் யவோரிவ் நகரில் வெளிநாடுகளில் இருந்து ரஷ்யாவிற்கு எதிரான தாக்குதலில் ஈடுபட 180 கூலிப்படையினர் வரவழைக்கப்பட்டனர். இந்த நிலையில் ரஷ்ய படையினர் அந்நகரில் உள்ள உக்ரைன் ராணுவ பயிற்சி நிலையத்தை குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் வெளிநாடுகளிலிருந்து வரவளைக்கப்பட்ட 180 கூலிப் படையினர் கொல்லப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யா பாதுகாப்புத்துறை பத்திரிகையாளர் உக்ரைனுக்கு நட்பு நாடுகள் வழங்கிய போர் ஆயுதங்கள் அழிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.