லாரியில் ஏற்றி வந்த கழிவுகளை அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று வந்துள்ளது. அப்போது அந்த லாரியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் மோட்டார் சைக்கிள்களில் லாரியை பின் தொடர்ந்து சென்று நிறுத்தியுள்ளனர். அப்போது லாரியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது.
மேலும் லாரி ஓட்டுநர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த நகர்மன்ற தலைவர் ஆசைத்தம்பி, கவுன்சிலர் ரெத்தினமணி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியை சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் லாரியில் கோழி கழிவுகளை பேச்சு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் லாரி உரிமையாளரை தொடர்பு கொண்டு யாரை அகற்றுமாறு கூறியுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.