நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக பருப்பு , சீனி, கோதுமை மற்றும் இலவசமாக அரிசியும் வழங்கப்படுகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் புதுச்சேரியில் இலவச அரிசி பெறாத சிவப்பு ரேஷன் அட்டைகளை ரத்து செய்யப்போவதாக மாநில குடிமை பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது. பிப்ரவரி மார்ச் மாதத்திற்கான இலவச அரிசி அனைத்து பகுதிகளிலும் வினியோகம் செய்யப்பட உள்ளது. சிவப்பு ரேஷன் அட்டைதாரர்கள் மார்ச்-20க்குள் இலவச அரிசியை பெற்றுக்கொள்ளவேண்டும். அவ்வாறு இலவச பெறாதவர்கள் சிவப்பு அட்டைகள் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.