Categories
உலக செய்திகள்

பெரு நாட்டில் தீவிரமடைந்த போராட்டம்…. பரிதாபமாக உயிரிழந்த 7 பேர்…. அச்சத்தில் நாட்டு மக்கள்….!!!!

பிரபல நாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெரு நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் நிலையற்ற தன்மை நிலவுகிறது. இந்த நாட்டில் கடந்த 2020-ஆம் ஆண்டு 5 நாளில் 3 அதிபர்கள் மாறினர். இதனையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெட்ரோ காஸ்டிலோ  வலதுசாரியான கெய்கோவை  வீழ்த்தி அதிபர் ஆனார். ஆனால் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.  கடந்த சில நாட்களுக்கு முன்பு   பெட்ரோ காஸ்டிலோ  கூறியதாவது, “நாட்டில் அவசர நிலை அமல்படுத்தப்படும். நாட்டு மக்களின் கோரிக்கைக்கு பதில் அளிக்கிற வகையில் நமது நாட்டில்  சட்டம் மற்றும் ஜனநாயகத்தின் ஆட்சி மீண்டும் ஏற்படுத்தும் நோக்கத்தில் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த அரசை ஏற்படுத்துவதாக” அறிவித்தார்.

இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மந்திரிகள் பலர்  தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.  இந்நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அதிபருக்கு எதிராக  “இம்பீச்மெண்ட்”  நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த  தீர்மானத்திற்கு ஆதரவாக 101 ஓட்டுகளும், எதிராக 6  ஓட்டுகளும் விழுந்தது. இதனையடுத்து  அதிபர் பதவி விலகினார் . மேலும்  போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் துணை அதிபராக இருந்து வந்த பெண் தலைவர் டினா பொலுவார்டே  அதிபராக பதவியேற்றார்  .

இந்நிலையில் பெட்ரோ காஸ்டிலோ பதவி விலகியதை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும்  இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இதுவரை 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பலரை கைது செய்தனர்” என கூறியுள்ளது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |