Categories
தேனி மாவட்ட செய்திகள்

பெறப்பட்ட 379 மனுக்கள்…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு…. 1,22,000 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்….!!

ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 12 பயனாளிகளுக்கு 1,22,000 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு ஆட்சியர் முரளிதரனிடம் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். அதன்படி மொத்தம் 379 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த ஆட்சியர் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அந்தந்த துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த கூட்டத்தில் சுமார் 1 லட்சத்து 22ஆயிரம் மதிப்பீட்டில் 12 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கியுள்ளார்.

Categories

Tech |