திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொத்தபுளிப்பட்டி பகுதியில் லாரி ஓட்டுனரான மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்த சிறுமிக்கு மாணிக்கம் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்தார்.
இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் சாணார்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்த போலீசார் மாணிக்கத்தை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் மாணிக்கத்திற்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும், 1 1/2 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து உத்தரவு பிறப்பித்தது.