லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் உள்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பழைய கட்டிடத்தின் 2-வது மாடியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு கார்த்திக் பிரபு என்பவர் சட்ட உதவியாளராகவும், தனலட்சுமி என்பவர் குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினராகவும் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் காப்பகத்தில் இருக்கும் குழந்தையை வீட்டிற்கு அனுப்புவதற்கு இருவரும் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தனர். இதனை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் அறிவுரைப்படி ரசாயனம் தழுவிய ரூபாய் நோட்டுகளை குழந்தையின் பெற்றோர் கார்த்திக் பிரபு, தனலட்சுமி ஆகியோரிடம் கொடுத்தனர். அப்போது அங்கு மறைந்திருந்தால் லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கையும் களமாக பிடித்தனர். இதனையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.