டிப்ளமோ என்ஜீனியர் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் நடராஜபுரம் பகுதியில் தனுசுராம் என்பவர் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். டிப்ளமோ என்ஜினீயரிங் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் தனது உறவுக்கார பெண் ஒருவரை இருவீட்டாரின் சம்மதத்துடன் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே தனுசுராம் தனது வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதனை அறியாத அவரது குடும்பத்தினர் தனுசுராமை காணவில்லை என பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இதனையடுத்து வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகைக்கு சென்று பார்த்தபோது தனுசுராம் தூக்கில் பிணமாக கிடந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற நாமக்கல் காவல்துறையினர் தனுசுராமின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தனுசுராம் தற்கொலைக்கான காரணம் என்னவென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.