Categories
உலக செய்திகள்

பெற்றோருக்கு தெரியாமல் காரை ஓட்டி சேதப்படுத்திய 4-வயது சிறுவன்…. போலீசாரின் செயல்….!!!!

நான்கு வயது சிறுவன் பெற்றோருக்கு தெரியாமல் காரின் சாவியை எடுத்து காரை தாறுமாறாக ஓட்டிய சம்பவம் அரங்கேறி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெதர்லாந்து நாட்டில் 4 வயது சிறுவன் ஒருவன் பெற்றோருக்கு தெரியாமலே காரின் சாவியை எடுத்து சென்று காரை தாறுமாறாக ஓட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று அந்த சிறுவன் வீட்டிலிருந்த தன் அம்மாவின் கார் சாவியை, யாருக்கும் தெரியாமல் எடுத்து சென்று, காரை இயக்க முயன்றுள்ளான். அதன் பிறகு, அருகே இருந்த பிற கார்களையும் சேதப்படுத்தியுள்ளான். அப்போது காரின் ஆக்ஸ்லெட்டரை வேகமாக அழுத்தி காரை இயக்கி, கார் கட்டுப்பாடின்றி தாறுமாராக சென்று அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் மோதியுள்ளது.
இந்நிலையில் இதில் வேடிக்கை என்னவென்று பார்த்தால், பெற்றோர் வரும்வரை அந்த சிறுவன் அழாமல் இருக்க சாக்லேட் மற்றும் பொம்மைகள் வாங்கி கொடுத்து  பத்திரமாக போலீசார் பார்த்துக்கொண்டனர்.மேலும்  இதுபற்றி சமூக வலைதளங்களில் பதிவிட்ட போலீசார், அச்சிறுவனை 2021-ஆம் ஆண்டின் பார்முலா-ஒன் கார் சாம்பியனான மேக்ஸ் வெர்ஸ்டப்பனோடு உடன் ஒப்பிட்டுள்ளனர்.  இதையடுத்து இச்சிறுவனை, புதிய மேக்ஸ் வெர்ஸ்டப்பன் என்றும்  வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளனர்.

Categories

Tech |