Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பெற்றோருடன் அகல் விளக்கு ஏற்றிய சிறுமி…. தீயில் கருகி பலியான சம்பவம்…. பெரும் சோகம்…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மாளிகம்பட்டை பகுதியில் காசிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்ய பிரியா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அரசு நடுநிலைப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளார். அப்பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோவிலில் விழா நடைபெற்றது. இந்நிலையில் திவ்யப்பிரியா தனது பெற்றோருடன் சேர்ந்து கோவிலில் அகல் விளக்கு ஏற்றியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அகல்விளக்கில் எரிந்து கொண்டிருந்த தீ சிறுமியின் ஆடையில் பற்றி உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.

இதனால் சிறுமி வலியில் அலறி சத்தம் போட்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் தங்களது மகளை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |