Categories
உலக செய்திகள்

பெற்றோருடன் சேர நினைத்த இளைஞர்…. பரிதாப மரணம்…. என்ன நேர்ந்தது?….

கனடாவுக்கான விசா தொடர்ந்து மறுக்கப்பட்ட சோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

இந்தியா நாட்டில் பஞ்சாப் என்ற மாநிலம் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவரின் பெற்றோர் கனடாவில் வசிக்கின்றனர். இதனை அடுத்து தானும் கனடாவுக்கு செல்ல வேண்டும் என்ற கனவில் அவர் இருந்தார். ஆனால் ஐந்து முறை முயன்றும் கனடா விசாவை பெறும் அவரின் கனவு தோல்வியில் முடிந்துள்ளது. இந்த சோகத்திலிருந்த அவர் பாட்டி வீட்டின் ஐந்தாவது மாடியிலிருந்து நேற்று முன்தினம் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றினார்கள். அவரின் அறையில் மதுபாட்டில் மற்றும் சிகரெட்கள் கண்டெடுக்கப்பட்டது. அவர் உயிரிழந்த தகவல் கனடாவிலுள்ள பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் கனடாவிலிருந்து வந்தவுடன் பிரேத பரிசோதனை நடைபெறும் என தெரிய வந்துள்ளது.

Categories

Tech |