திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூம்புழல் நகர் சாமிப்பிள்ளை தெருவில் கூலி தொழிலாளியான மகேஷ்வரன்(45) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு மகேஷ்வரன் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ரயில் சேலம் அருகே சென்று கொண்டிருந்தபோது பெற்றோருடன் பயணம் செய்த 16 வயது சிறுமியிடம் மகேஷ்வரன் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் சேலம் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் மகேஷ்வரனை கைது செய்தனர். இதனை விசாரித்த சேலம் நீதிமன்றம் மகேஷ்வரனுக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும், 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.