நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகின்றது. இதனால் நாளுக்கு நாள், இறப்பு விகிதங்களும், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இதற்கு மத்தியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகளும் உயிரிழந்து வருகின்றனர்.
இதனால் மக்கள் தங்களுடைய உறவுகளையும், அன்பானவர்களையும் இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் அரசுகள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் உத்தரகாண்டில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை மற்றும் வேலைவாய்ப்பில் 5% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவையும் அரசே ஏற்கும் என்று கூறியுள்ளார்.