Categories
தேசிய செய்திகள்

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் வைப்புத்தொகை…. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். இருந்தாலும் நாள்தோறும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனா  பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனாவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

அதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிதி வழங்கும் பணியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 10 லட்சம் வைப்புத் தொகை வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதன்படி பிஎம் கேர்ஸ் நிதி மூலம் குழந்தைகளுக்கு 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் 23 வயதை அடைந்ததும் இந்த உதவித் தொகை வழங்கப்படும். மேலும் குழந்தைகள் 18 வயதாகும் வரை மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத் திட்டங்களை மத்திய அரசு எப்படி செயல்படுத்த போகிறது என்ற கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், திட்டத்தை செயல்படுத்துவது பற்றி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. பெற்றோரை இழந்த குழந்தை களுக்கு 10 லட்சம் வைப்புத்தொகை அளிப்பதாக மத்திய அரசு கூறியிருந்த நிலையில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |