இத்தாலியில் தன் பெற்றோரை சொந்த மகனே கொலை செய்து ஆற்றில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலி நாட்டின் போல்சானோ என்ற பகுதியை சேர்ந்த தம்பதிகள் லாரா பெர்செல்வி மற்றும் பீட்டர் நியூமெயிர். இவர்கள் கடந்த ஜனவரி 4 ஆம் தேதி அன்று திடீரென்று மாயமானதால் காவல்துறையினர் காணாமல் போனவர்கள் வழக்கில் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். மேலும் அவர்கள் நடைபயிற்சி மேற்கொண்டிருக்கும் போது ஏதேனும் நிகழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அதிகாரிகள் விசாரித்து வந்தனர்.
எனினும் காவல்துறை தீவிர விசாரணையில் அவர்கள் சொந்த மகனே பெற்றோர்களை கொலை செய்தது தெரியவந்துள்ளது. அதாவது தம்பதியினர் மாயமான பின்பு அவர்களின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்கவில்லை. மேலும் அவர்களின் போனும் தொடர்பு இல்லாமல் இருந்துள்ளது. இதனால் காவல்துறையினர் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
அதன்படி Adige ஆற்றின் குறுக்கே இருக்கும் பாலம் ஒன்றில் ரத்தக்கரை கிடந்துள்ளது. அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பீட்டர் நியூமெயிரின் ரத்தக்கறை தான் என்று உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவரது மகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் அவர்தான் பெற்றோர்களை கொன்று ஆற்றில் போட்டுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.