Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெற்றோரை பார்க்க சென்ற பெண்..! வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு..!!

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து பணம் மற்றும் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர் காலனியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக தனியார் நிறுவனம் ஒன்றில் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். மேலும் அவரது மனைவி அபிராமி கர்ப்பமாக இருப்பதால் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து நேற்று அபிராமி வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது படுக்கை அறையில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் தங்க நகை, டி.வி., ஒரு பவுன் தங்க சங்கிலி, தலா அரை பவுன் எடை உள்ள இரண்டு தங்க மோதிரங்கள் என மொத்தம் ரூ.50,000 பணம் மற்றும் 5 பவுன் நகை திருடு போயிருந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த பெரம்பலூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு சோதனை நடத்தினர். இதற்கிடையே மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டதோடு, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களும் சேகரிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் பணம் மற்றும் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |