Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பெற்றோர்களும் எதுவும் சொல்லல… 9ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்துகொண்ட இளைஞன்… உடனடியாக கைது செய்த போலீசார்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் 9ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்துகொண்ட இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பகுதியில் அம்பேத்கர் தெருவில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் மாரிமுத்து(21). இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை மாரிமுத்து காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதனையறிந்த கயத்தாறு ஒன்றிய சமூகநல அலுவலர் பூங்கொடி கழுகுமலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 18 வயது கூட நிரம்பாத பள்ளி மாணவியை திருமணம் செய்த மாரிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |