ஜெர்மனியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உதவும் விதமாக ரோபோ ஒன்று அவனுக்கு பதிலாக பள்ளிக்கூடம் செல்லும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனியில் ஜோஸ்வா என்னும் 7 வயது சிறுவன் வசித்து வருகிறான். இவனுக்கு நுரையீரலில் மிகவும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ஜோஸ்வாவின் கழுத்தில் குழாய் இணைக்கப்பட்டுள்ளது.
ஆகையினால் அச்சிறுவனால் பள்ளிக்கு செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில்தான் அவதார் எனும் ரோபோ ஒன்று ஜோஸ்வானுக்கு பதிலாக கல்வி பயில்வதற்காக பள்ளிக்கு செய்துள்ளது. இந்த அவதார் ரோபோவின் மூலம் ஜோஸ்வா தனது நண்பர் மற்றும் ஆசிரியருடன் மிகவும் சுலபமாக தொடர்பு கொள்ள முடிகிறது.