Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே!…. இனி 6 வயதில் 1ஆம் வகுப்பு சேர்க்க வேண்டும்…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

மத்திய கல்வி அமைச்சகத்தின் தன்னாட்சி பெற்ற அமைப்பாக உள்ள கேந்திரிய வித்யாலயா சங்கதன் நிறுவனத்தின் கீழ் நாடு முழுவதும் கே.வி., பள்ளிகள் செயல்படுகின்றன. அதாவது ராணுவத்தினர், மத்திய, மாநில அரசின் அலுவலர், ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனத்தினர் போன்றோரின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளித்து இந்த கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இதையடுத்து மீதம் உள்ள இடங்கள் மற்றவர்களுக்கு ஒதுக்கப்படும்.

இந்த பள்ளிகளில் 1ஆம் வகுப்பில் மாணவர்களை சேர்க்கும் பணி நடக்கும் போது அந்த ஆண்டு மார்ச் 31 அல்லது ஏப்., 1ல், 5 வயது நிறைந்திருக்க வேண்டும் என்ற விதி பல வருடங்களாக உள்ளது. வரும் 2022- 23ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை கேந்திரிய வித்யாலயா சங்கதன் வெளியிட்டுள்ளது. அதில் 1ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு புதிய கல்வி கொள்கையின்படி 6 வயதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

அதாவது கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான வயது வரம்பு 5-லிருந்து 6-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 6 வயது நிரம்பிய மாணவர்களை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1-ஆம் வகுப்பில் சேர்க்கலாம். இன்று (பிப்.28) முதல் kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 5 வயது நிறைவடைந்தால் போதும் என்ற நிலையில், தற்போது 6 வயது நிறைவடைய வேண்டும் என்று திடீரென வயது வரம்பை உயர்த்தியுள்ளதால், ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த ஆண்டு கே.வி., பள்ளிகளில் சேர முடியாத நிலை ஏற்படும். ஏற்கனவே தனியார் பள்ளிகளில் ‘அட்மிஷன்’ முடிந்து விட்டதால் அங்கும் ‘சீட்’ பெற முடியாது. தமிழக மாணவர்களை பொறுத்தவரையிலும் அரசு பள்ளிகளில் மட்டுமே சேருவதற்கு வாய்ப்பு உள்ளது.

Categories

Tech |