Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே இன்று முதல் இலவசம்… புதிய அறிவிப்பு… போடு செம…!!!

சென்னை மெட்ரோ ரயிலில் 90 சென்டிமீட்டர் வரை உயரமுள்ள சிறுவர்கள் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டதாக மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தளர்வு களில் ஒன்றான கட்டுப்பாடுகளுடன் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.

பயணிகளுக்காக சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் கட்டண தள்ளுபடி, அரசு பொது விடுமுறை தினங்களில் 50 சதவீத கட்டணச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக 90 சென்றி மீட்டர் வரை உயரமுள்ள சிறுவர்களுக்கு மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அதிரடி அறிவிப்பு பொதுமக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |