தபால் நிலையங்களில் ஆண் குழந்தைகளுக்கான பொன்மகன் சேமிப்பு திட்டத்தின் விரிவான தகவல்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
தபால் நிலையங்களில் ஆண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டமாக பொன்மகன் சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஆண் குழந்தைகளின் பள்ளிப்படிப்பு தொடங்கி படித்து முடிக்கிற வரை ஆகக்கூடிய அத்தனை செலவுகளையும் எதிர்கொள்ளும் வகையில் இந்த திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 500 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை சேமிப்பு தொகையாக செலுத்திக் கொள்ளலாம். அதோடு முதிர்வு காலம் வரும் முன்னரே பணம் தேவைப்பட்டால் எடுத்துக் கொள்ளலாம் போன்ற பல சிறப்பம்சங்கள் இந்தத் திட்டத்தில் உள்ளது. இந்தத் திட்டத்திற்கு முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும்.
அதோடு இந்த திட்டத்திற்கு வட்டியாக 8.1 சதவிகிதம் வழங்கப்படுகிறது. அதோடு பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் திட்டத்திற்கு தபால் நிலையங்களில் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. அதோடு இந்த திட்டத்தை எல்ஐசி, எஸ்பிஐ போன்ற நிறுவனங்களிலும் தொடங்கலாம். இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். தபால் நிலையங்களில் இந்த திட்டத்திற்கான வட்டியாக 7.9 சதவீதம் வழங்கப்படுகிறது.