Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள் லைப் ஸ்டைல்

பெற்றோர்களே! உங்க குழந்தை வாந்தி எடுத்தால்…. இதை மட்டும் செய்யாதீங்க…. உயிருக்கே ஆபத்து…!!!

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவனும் அவருடைய அண்ணனும் ஒரே அறையில் உறங்கிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது தம்பிக்கு திடீரென வாந்தி வந்துள்ளது. இதையடுத்து எங்கே வாந்தி எடுத்தால் மெத்தை வீணாகி விடுமோ என்று எண்ணி அண்ணன் தம்பியின் வாயை தன் கையால் பொத்தி குளியலறைக்கு கொண்டு சென்றுள்ளார். இதனையடுத்து அந்த சிறுவனுக்கு மூச்சுத்திணறல் எடுத்துள்ளது. பின்னர் அச்சிறுவனின் உயிர் பிரிந்துள்ளது. இந்நிலையில் அச்சிறுவனுக்கு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் வாந்தி வந்தபோது வாயை பொத்தியதால் வாந்தியானது நேரடியாக சுவாசக் குழாய்க்குள் சென்று மூச்சுவிடும் பாதையை அடைத்து விட்டது.

அதனால் அந்த சிறுவன் மரணம் அடைந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பெற்றோர்களே உங்களுடைய குழந்தைகள் வாந்தி எடுக்கும்போது உடனே எடுக்க வையுங்கள்.  இடம் துணி மெத்தை இருக்கைகள் வீணாகிவிடும் என்று வாயைப் பொத்திக் கொண்டு நீண்ட நேரம் செல்ல வேண்டாம். இடம், பொருள் அசுத்தமாகி விட்டால் சுத்தம் செய்திடலாம். ஆனால்  குழந்தையின் உயிர் போனால் என்ன செய்ய முடியும்? சிந்தித்துப் பாருங்கள்.

Categories

Tech |