Categories
பல்சுவை

பெற்றோர்களே…..! உங்க குழந்தைகள் ரொம்ப பிடிவாதம் பிடிக்கிறார்களா”….. அவங்கள சமாளிப்பது எப்படி?….!!!!

உங்கள் வீட்டில் குழந்தைகள் மிகவும் பிடிவாதமாக உள்ளார்களா? அவர்களை எப்படி சமாளிப்பது என்பதை பற்றி தான் நாம் பார்க்க போகிறோம்.

குழந்தைகள் என்றாலே ஏதாவது ஒரு பொருளை கேட்டு பிடிவாதம் பிடிக்க தான் செய்வார்கள். அவர்களை சமாளிப்பது என்பது தாய்மார்களுக்கு மிகப்பெரிய வேலை. ஒரு ஆய்வின்படி குழந்தைகளின் 8 வயது வரை அவர்களின் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்குமாம். அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாத பட்சத்தில் அவர்கள் கோபம் பிடிவாதமாக மாறுகிறது. உங்கள் குழந்தைகள் ஒரு விஷயத்திற்காக அடம்பிடிக்கும் போது நீங்கள் அவரை அடிக்கவோ, திட்டவோ கண்டிக்கவோ கூடாது. அதனால் எந்த பயனும் கிடையாது. அவர்களின் பிடிவாதம் குறையும் வரை காத்திருப்பது தான் நல்லது. குழந்தைகளுக்கு பெற்றோர்களின் நிலை எப்போதும் புரியாது. அந்த நிலைமையில் குழந்தைகளின் பிடிவாதம் சற்று குறைந்த பிறகு அவர்களிடம் பொறுமையாக எடுத்துக் கூற வேண்டும். மாறாக உங்களின் கோபத்தை அவர்களிடம் காட்டுவது எந்த விதத்திலும் பயனளிக்காது.

முதலில் குழந்தைகள் எந்த விஷயத்திற்காக பிடிவாதம் பிடிக்கிறார்கள் என்பதை பொறுமையாக அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். பின்னர் அதற்கு ஏற்றவாறு நாம் திட்டமிட வேண்டும் .முதலில் குழந்தைகள் ஏதேனும் ஒரு பொருளை வேண்டி அடம்பிடித்தால் அந்த பொருள் தேவைப்பட்டால் மட்டும் அவர்களுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும். இல்லையெனில் வாங்கி கொடுப்பது அவர்களுக்கு தொடர்ந்து பிடிவாதம் பிடிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும். அவர்களை சமாதானப்படுத்த வேண்டும் என்பதற்காக பொம்மை, சாக்லேட் போன்றவற்றை அதிகளவில் வாங்கி குவிக்காமல் அளவாக வாங்கிக் கொடுத்து அவர்களை சமாதானம் செய்வதற்கு முயற்சி செய்யுங்கள்.

ஐஸ்கிரீம், சாக்லெட் போன்றவற்றை சில சமயங்களில் குழந்தைகளுக்கு தரும் பெற்றோர்கள் இதை வழக்கமாக கொடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். உங்கள் குழந்தைகள் பிடிவாதம் பிடிக்கும் பொருளை வாங்கி கொடுக்க முடியாத நிலையில் அவர்களின் கவனத்தை திசை திருப்ப வேண்டும். எடுத்துக்காட்டாக குழந்தைகளுக்கு வேறு ஏதாவது பொம்மையை கொடுத்து சமாதானம் செய்வது, இல்லையென்றால் வேடிக்கை காட்டுவது போன்றவற்றை செய்து அவர்களின் கவனத்தை திசை திருப்பினால் அவர்களின் பிடிவாதம் சற்று குறையும். குழந்தைகள் அடம் பிடிக்கும் பொழுது ‘நீங்கள் நல்ல குழந்தைதானே’ ‘சொன்னால் கேட்டுக் கொள்வீர்கள் தானே’ என்று கூறி அவர்களிடம் அன்பை காண்பித்து அவர்களின் பிடிவாதத்தை குறைக்க வேண்டும்.

Categories

Tech |