பெற்றோர்களைப் பார்த்து தான் குழந்தை வளரும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். தங்களது குழந்தைகளை நல்லொழுக்கத்துடன் வழங்குவது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். அதன்படி குழந்தைகள் முன்பு பெற்றோர் செய்யக் கூடாத சில விஷயங்கள் உள்ளன. அது என்னவென்றால், குழந்தைகள் ஒரு கண்ணாடி போன்றவர்கள். நீங்கள் செய்யக் கூடியதை அப்படியே பிரதிபலிப்பார்கள். அதனால் அவர்கள் முன்பு நாம் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் முழு கவனத்துடன் செய்ய வேண்டும். குழந்தைகளின் முன்பு மற்றவர்களைப் பற்றி தவறாக பேசக்கூடாது. அவ்வாறு தவறாக பேசினால் குறிப்பிட்ட நபர் பற்றி தவறான கருத்துக்களை குழந்தைகள் தங்கள் மனதில் வளர்த்துக் கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளது.
அவரைப்போலவே கைபேசி மற்றும் மடிக்கணினி போன்ற தொழில்நுட்ப சாதனங்களை குழந்தைகளின் முன்பு அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு நீங்கள் செய்யும் தவறு குழந்தைகளை தனிமைப்படுத்துவது போன்ற ஆகிவிடும். உங்கள் குழந்தைகளின் முன்பு வாக்குவாதத்தை வைத்துக்கொள்ள வேண்டாம். அவ்வாறு செய்வதே குழந்தையின் மன அமைதியை பாதிப்பதோடு அவர்களை கடின உள்ளம் கொண்டவர்களாக மாற்றி விடும்.
அதிலும் குறிப்பாக குழந்தைகளின் முன்பே உங்கள் மனைவியை திட்ட வேண்டாம். அவ்வாறு செய்தால் குழந்தைகளின் முன்பு உங்கள் மனைவியை கெட்டவராக சித்தரிப்பது போல மாறிவிடும். அதன் காரணமாக அவர்களுக்கு இடையேயான உறவு பெரிதும் பாதிக்கப்படும். மேலும் குழந்தைகளின் முன்பு புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் கூடாது. என்ன காரணம் என்றால் நீங்கள் செய்யும் அனைத்து விஷயங்களும் அவர்களுக்கு நல்ல விஷயமாக தோன்றும். எனவே உங்கள் குழந்தைகளின் முன்பு தீய பழக்கங்களை வைத்துக் கொள்ளாதீர்கள்.
இதில் முக்கியமானது மற்றவர்கள் முன்பு உங்கள் குழந்தையை அல்லது மற்றவர் பற்றி உங்கள் குழந்தைகளின் முன்னிலையில் ஒப்பீட்டு பேசுதல் மிகவும் தவறான விஷயம். அவ்வாறு செய்வது அவர்களின் மனதளவில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். இவற்றில் எல்லாம் மிக முக்கியமானது குடும்பங்களில் நிதிச்சுமை இருப்பது இயல்பான ஒன்று.இருந்தாலும் இந்த நிதிச்சுமையை போக்க உங்கள் குழந்தையின் முன்பு கடன் வாங்கும் விஷயங்களை செய்தல் நல்லது கிடையாது. எனவே இது போன்ற விஷயங்களை பெற்றோர்கள் செய்யாமல் தவிர்ப்பது மிகவும் நல்லது.