இந்திய அஞ்சல் துறை மக்களுக்காக பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவும் நோக்கத்தில் மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் செல்வம் மகள் சேமிப்பு திட்டத்தை நடத்தி வருகிறது. இந்தத் திட்டத்தில் பெண் குழந்தைகள் பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கை தொடங்கி முதலீடு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக 250 ரூபாய் செலுத்தி சேரலாம்.
அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும். ஒரே குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகளை வைத்துள்ள பெற்றோர்களும் இந்த திட்டத்தில் கணக்கு தொடங்கலாம்.என் நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அலுவலகத்தில் அக்டோபர் 11ஆம் தேதி வரை செல்வமகள் சேமிப்பு திருவிழா நடைபெற உள்ளதா என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவும் நோக்கத்தில் அஞ்சலகங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் செல்வமகள் சிறுசேமிப்பு திட்டத்தில் பயன்பெற வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.