Categories
பல்சுவை

பெற்றோர்களே…. உங்க பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு…. வெறும் 500 ரூபாய் செலுத்தினால் 2.5 லட்சம் ரிட்டன்ஸ்….!!!!

இந்தியாவில் மக்கள் அனைவரும் பயன் பெரும் விதமாக வங்கி மற்றும் தபால் துறையில் பல வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் செல்வமகள் சேமிப்புத் திட்டம். இந்த திட்டம் முழுக்க முழுக்க பெண் குழந்தைகளுக்கானது.இதில் பத்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் பெற்றோர்கள் கணக்கு தொடங்க முடியும். மற்ற அஞ்சலக சிறுசேமிப்பு திட்டத்தை ஒப்பிடுகையில் இந்த திட்டத்தில் கூடுதல் வட்டி வழங்கப்படுகின்றது. அதாவது இந்த திட்டத்தில் ஏழு புள்ளி ஆறு சதவீதம்பட்டி வழங்கப்பட்டு வருகின்றது.

இதன் முதலீட்டு காலம் 15 வருடங்கள். முதிர்வு காலம் 21 வருடங்கள். குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்து கொள்ளலாம். இதில் மாதா ஐநூறு ரூபாய் டெபாசிட் செய்தால் ஒரு வருடத்திற்கு வைப்புத் தொகை 6000 ரூபாய் முதலீடு செய்யலாம்.உங்களின் பெண் குழந்தைக்கு ஒரு வயது இருக்கும் போது இந்த திட்டத்தில் நீங்கள் சேர்ந்தால் அந்த குழந்தையின் 21 வயது ஆகும்போது 2,54,606 வரை திரும்ப பெறலாம்.அது மட்டுமல்லாமல் இதில் முதலீடு செய்பவர்கள் உங்களின் பெண் குழந்தைக்கு 18 வயது முடிந்த பிறகு உயர் கல்விக்காக 50 சதவீதம் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். மீதமுள்ள தொகையை திருமணத்தின்போது எடுக்க முடியும்.

Categories

Tech |