புதுச்சேரியில் நான்கு மணி நேரம் ஹெட்போன் பயன்படுத்தி கேம் விளையாடிய சிறுவன் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் வில்லியனூர் என்ற கிராமத்தில் தர்ஷன் என்ற 16 வயது சிறுவன் நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து நான்கு மணி நேரமாக ஆன்லைனில் “fire wall” என்ற கேமை விளையாடி உள்ளான். நீண்ட நேரத்திற்குப் பிறகு சிறுவனின் தந்தை பச்சையப்பன், எதர்ச்சையாக தன் மகனை பார்த்தபோது மூச்சு பேச்சின்றி அவன் கிடந்துள்ளார். உடனே பதறிப்போன பெற்றோர் இரவு 11 மணிக்கு சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
அதனைக் கேட்டு பெற்றோர் கதறி அழுதனர். அந்த சிறுவன் தொடர்ந்து 4 மணி நேரமாக கேம் விளையாடியதால் தான் இறந்து விட்டானா அல்லது வேறு ஏதும் நோய் காரணமாக இறந்தானா என்பது பற்றி எதுவும் தெரியவில்லை. இதனையடுத்து அந்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சிறுவன் 4 மணி நேரம் ஹெட்போன் பயன்படுத்தி கேம் விளையாடியதால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு மரணம் நிகழ்ந்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது. பெற்றோர்களே உங்கள் குழந்தைகள் கேம் விளையாடும் போது இனி கவனம் செலுத்துங்கள்.