Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே உஷாரா இருங்க…. இனி குழந்தைகளை பள்ளிக்கு இதில் அனுப்பக் கூடாது…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நாகர்கோவிலில் வசித்து வரும் சுயம்புலிங்கம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில்  பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழகத்தில் பள்ளி வாகன விதிமுறைகள் ஒரே மாதிரி இருக்க வேண்டும். இந்நிலையில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை   ஆட்டோ போன்ற வாகனங்களில்  அனுப்பி வைக்கின்றனர். மாணவர்கள் இப்படி வருவதை  பள்ளிகள் எப்படி ஏற்று கொள்ளலாம். இந்நிலையில் பள்ளி வாகனங்களுக்கு பல விதிகள் இருக்கிறது.

ஆனால் ஆட்டோ போன்ற வாகனங்களுக்கு என்ன விதிகள் இருக்கிறது. மேலும் பள்ளி வாகனங்கள் விதிமுறைகளை  முறையாக பின்பற்ற  வேண்டும். இதனையடுத்து குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்புவதை ஏற்க முடியாது. மேலும் வாகன விதிகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து  பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |