கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள குடியிருப்பு ஒன்றில் 46 வயதுள்ள நபர் ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். அவருக்கு 15 வயதுடைய மகன் ஒருவன் உள்ளான். அவரின் மொபைல் போனில் இருந்து ஆன்லைன் விளையாட்டு ஒன்றை பதிவிறக்கம் செய்து தொடர்ந்து விளையாடி வந்துள்ளார். இந்த நிலையில் லக்ஷ்மி பாய் என்ற பெண் ஒருவர் சிறுவனை தொடர்பு கொண்டு, அதிகமான ஆன்லைன் விளையாட்டுகள் வழங்குவதாக கூறி சிறிய தொகையை அனுப்ப வேண்டும் என கேட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ஆன்லைன் இணைப்புகளை அனுப்பி அதில் பதிவு செய்வதுடன் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என கூறினார். ஆன்லைன் விளையாட்டில் மூழ்கி கிடந்த சிறுவன், அந்தப் பெண்ணின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தந்தையின் வங்கி கணக்கில் இருந்து 4 லட்சம் ரூபாய் வரை பணம் அனுப்பியுள்ளான். ஆனால் படம் பெற்ற பிறகு அந்தப் பெண் எதுவும் பேசவில்லை. தொடர்பு கொண்டாலும் எந்த பதிலும் இல்லை. இதனால் ஏமாற்றப்பட்டதாக அறிந்த சிறுவன் மற்றும் அவரின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதை சற்று கவனித்து கொள்வது மிகவும் நல்லது.