Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்… இனிமே உங்க குழந்தையை தனியா அனுப்பாதீங்க… ரேஷன் கடையில் நடந்த கொடூரம்…!!!

தர்மபுரி மாவட்டத்தில் ரேஷன் கடை பணியாளர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். அரசு பாலியல் கொடுமைக்கு எதிரான பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தாலும், சிலர் காமக் கொடூரர்கள் தொடர்ந்து இது மாதிரியான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம் அருகே ரேஷன் கடை பணியாளர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதால், சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் போலீசார் தலைமறைவாக இருந்த ரேஷன் கடை பணியாளர் கணேசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெளியில் தனியாக அனுப்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |