Categories
லைப் ஸ்டைல்

பெற்றோர்களே உஷார்… உங்க குழந்தை இப்படி மலம் கழிக்கிறதா?… அது மிகவும் ஆபத்து…!!!

உங்கள் குழந்தை இந்த நிறத்தில் மலம் கழித்தால் உடனே மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது.

ஒவ்வொரு தாய்மாருக்கும் குழந்தையை பராமரிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. பிறந்த குழந்தையின் மலம் வெவ்வேறு நிறங்களில் இருக்கும்.தாய்ப்பாலுக்கு பிறகு இணை உணவுகள் கொடுக்கும் போது குழந்தையின் மலம் பல்வேறு வண்ணங்களில் இருக்கும். அதற்கு காரணம் அவர்கள் உண்ணும் உணவு பழக்கம்தான். உங்கள் குழந்தையின் மலத்தை வைத்து குழந்தையின் ஆரோக்கியத்தை சொல்லிவிடலாம். மஞ்சள், வெளிர் மஞ்சள், கறுப்பு மற்றும் பச்சை நிறத்தில் இருக்கும். அதனால் இதனைப் பற்றி தாய்மார்கள் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது.

உங்கள் குழந்தையின் மலம் வெள்ளை நிறத்தில் இருந்தால், குழந்தையின் உணவு செரிக்காத நிலையில் இருக்கலாம். குழந்தை வெள்ளை மலத்தை மட்டுமே வெளியிட்டிருந்தால் அது பித்தம் குறைவாக இருக்கலாம். ஏனென்றால் மலத்திற்கு நிறம் கொடுப்பது பித்த நிறமிகள் தான். இல்லையென்றால் நிறமிகள் குடலை அடைவதைத் தடுக்கும் அழைப்பாக இருக்கலாம். தொடர்ந்து குழந்தையின் மலம் வெள்ளையாக இருந்தால் மருத்துவரை பார்ப்பது மிகவும் நல்லது. காது நோய் தொற்றுக்கான சில நுண்ணுயிர் எதிர்ப்புகளும் வெள்ளை மலத்தை உண்டாக்கும்.

சில நேரங்களில் சிவப்பு மலம் வெள்ளை நிற மலச்சிக்கலின் அடையாளமாக இருக்கும். இரும்புச்சத்து குறைபாடு வெள்ளை நிற மலத்திற்கு காரணம். சில சமயங்களில் கல்லீரல் அடைப்பின் அறிகுறியாக கூட இருக்கலாம். கல்லீரல் பித்தத்தை உருவாக்கும். இது உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்க உதவும். கல்லீரலில் இருந்து பித்தத்தை வெளியேற்ற முடியா விட்டால் அது பிரச்சனையாகவும் கல்லீரல் செல் வடுவாகவும் இருக்கும். அது மோசமான கல்லீரல் செயலிழப்பு வழிவகுக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு ஒரு வயதுக்கு மேல் வெள்ளை நிற மலம் வந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். அதற்கு வீட்டு வைத்தியம் செய்வதை தவிர்த்து மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது.

Categories

Tech |