Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. காருக்குள் மூச்சுத் திணறி உயிரிழந்த 3 குழந்தைகள்…. பெரும் சோகம்….!!!!

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே காருக்குள் மூச்சுத் திணறி மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பணகுடி பகுதி அருகே நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் ஒரு கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த காரில் மூன்று குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கதவை திறக்க தெரியாமல் மூன்று குழந்தைகளும் அந்த காருக்குள் வசமாக சிக்கிக் கொண்டனர்.  இதையடுத்து வெளியே வர முடியாமல் திணறிய நாகராஜன் என்பவரின் மகள் நித்திரை (7), மகன் நிதிஷ் (5), சுதாகர் என்பவரின் மகன் கபிலன் (4) ஆகிய 3 பேரும் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

3 நாட்களாக கார் அங்கேயே நிற்கப்பட்டிருந்ததால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்துள்ளது. அதிக உஷ்ணம் காருக்குள் இருந்ததோடு ஆக்சிஜன் குறைவாக இருந்துள்ளது. இதனால் குழந்தைகள் தோலில் காயம் ஏற்பட்டு உள்ளது . உஷ்ணம் தாங்காமல் காரை விட்டு வெளியே வர நினைத்து குழந்தைகள் கதவை திறக்க முயன்றபோது முடியாத நிலையில் வாந்தி எடுத்து, மூச்சுத்திணறி மயங்கியுள்ளனர். 30 நிமிடங்களாக அவர்கள் காரை விட்டு வெளியே வர போராடியுள்ளனர்.

வெகு நேரமாக குழந்தைகளை காணாமல் தேடிய பெற்றோர் குழந்தைகள் காருக்குள் மயங்கிய நிலையில் இருப்பதை பார்த்து அவர்களை மீட்டு பணகுடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.   இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கும் போது பெற்றோர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.

Categories

Tech |