Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆபத்தானதா?…. உணவு பாதுகாப்பு துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

உலகம் முழுவதும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய தரமற்ற அப்பளத்தால் புற்றுநோய் உருவாகும் என்று உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் நிறம் சேர்க்கப்பட்ட குடல் அப்பளம், வடகம், வத்தல் போன்றவற்றின் தரம் தொடர்பாக ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புப்துறை உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு நிறம் சேர்க்கப்பட்ட அப்பளங்களை ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு அரசின் உணவுப் பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்பாக நிறம் சேர்க்கப்பட்ட அப்பளம், வடகம், வத்தல் தொடர்பாக பல்வேறு புகார்கள் பெறப்பட்டது. தரம் இல்லாத, நிறம் சேர்க்கப்பட்ட அப்பளம், வடகம், வத்தல் உள்ளிட்டவற்றை உண்பதால் உடல் உபாதைகள் ஏற்படும். அத்துடன் வயிற்றுப் புண், நாளடைவில் புற்றுநோய் உள்ளிட்ட உடல் நலக்குறைவு கூட ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த தரமற்ற அப்பளத்தில் Carmoisine, Tartrazine, sunset Yellow, Ponceau 4R போன்ற பல நிறமிகள் சேர்க்கப்படுகிறது. ஆகவே தரம் பற்றிய குறைபாடு தொடர்பாக 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் கொடுக்கலாம் என்று உணவு பாதுகாப்பு துறை தற்போது அறிவித்துள்ளது. மேலும் [email protected] என்ற இ-மெயில் முகவரியிலும் தரமற்ற உணவு குறித்து புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |