விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை நோக்கி பூரான் வருவதை கண்ட தாய் அதனிடமிருந்து காப்பாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து நாட்டில் வசிப்பக்கும் தாய் ஒருவருக்கு 1 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று குழந்தை வீட்டினுள் விளையாடிக்கொண்டிருந்துள்ளது. அதன் பக்கத்தில் குழந்தையின் அம்மா மொபைலில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென்று தன் மகனை நோக்கி ராட்சத பூரான் ஒன்று வந்துள்ளது. பூரான் வருவதைக் கவனித்த அந்த தாய் உடனே பாய்ந்து சென்று தன்னுடைய மகனை தூக்கியுள்ளார். இந்த ராட்சத பூரான்கள் கடிப்பதால் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும். அதன் விஷம் இதயத் துடிப்பை அதிகரித்து மூச்சுத் திணறலை ஏற்படுத்தும்.
செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தாலும் தன் மகன் மீது ஒரு கண்ணை வைத்திருந்த அந்த பெண்ணின் சமயோசித புத்தியால் தான் குழந்தையை பூரானிடமிருந்து காப்பாற்ற முடிந்துள்ளது. அதற்குள் அங்கு ஓடி வந்த குழந்தையின் பாட்டி ஒரு கண்ணாடி கோப்பையை பூரான் மீது கவிழ்த்து விட்டார். மூன்று சென்டிமீட்டர் நீளம் இருந்த அந்த பூரான் ஒரு பயத்தை ஏற்படுத்துவது நம்மால் மறுக்க இயலாது.