தமிழகத்தில் புதிதாக பரவிவரும் தொற்றுநோயால் இதுவரை மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவலைத் தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்தக் காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. ம்துரையில் மட்டும் இதுவரை 45க்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் பரவிவருவதாகவும் கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு 13 வயதுடைய சிறுவன் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்ற் உயிரிழந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் இரு குழந்தைகள் அதே பகுதியில் உயிரிழந்துள்ளன. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில் டெங்கு காய்ச்சலுக்கும் இவர்களது மரணத்திற்கும் தொடர்பு இல்லை எனத் தெரிவித்துள்ளனர். இது மக்களிடையே மேலும் அச்சத்தை கிளப்பியுள்ளது. டெங்கு அல்லாது வேறு மர்மகாய்ச்சல் பரவி வருகிறதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.