Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. குழந்தைகளை கவனமா பார்த்துகோங்க…. விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது.

அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் கொரோனாவின் மூன்றாவது அலையை சமாளிக்க இப்போதே மத்திய மற்றும் மாநில அரசுகள் தயாராக இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மூன்றாவது அலையை கட்டுப்படுத்துவதற்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும். மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆக்சிஜன் உள்ளிட்டவற்றை இப்போதே மருத்துவமனைகளுக்கு அனுப்பலாம். மூன்றாவது அலைகுழந்தைகளைப் பெறும் அளவில் தாக்கும் என விஞ்ஞானிகள் கூறுவதால் அதை சமாளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |