Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. குழந்தைக்கு வாங்கிய கடலை மிட்டாயில் தகர கம்பி…. அதிர்ச்சி சம்பவம்….!!!

கோவை மாவட்டத்தில் குழந்தைக்கு வாங்கிக் கொடுத்த கடலை மிட்டாயில் கம்பி இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பெத்தனூர் என்ற பகுதியை சேர்ந்த பிரபு என்பவர், அங்குள்ள நொறுக்ஸ் என்ற சிற்றுண்டி கடையில் தனது குழந்தைக்கு கடலைமிட்டாய் வாங்கியுள்ளார். அதன்பிறகு நேற்று தனது குழந்தைக்கு கடலை மிட்டாயை எடுத்து கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட குழந்தை பாதியிலேயே பிரபுவிடம் அதனை கொடுத்துவிட்டது.

மீதமிருந்த மிட்டாயை பிரபு சாப்பிடும் போது அதனுள் ஒரு சென்டிமீட்டர் நீளமுள்ள கூர்மையான தகர கம்பி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் புகார் தெரிவித்தார். அப்போது அவர்கள் முறையாக பதிலளிக்காமல் அலட்சியம் செய்து உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Categories

Tech |