சென்னையை சேர்ந்த தம்பதிகள் சதீஷ் -காயத்ரி. இவர்களின் மகள் தாரணி( 13) சம்பவத்தன்று பக்கத்தில் உள்ள மளிகை கடை ஒன்றில் குளிர்பானம் வாங்கிக் குடித்துள்ளார். அதன்பிறகு குளிர்பானம் குடித்த சிறிது நேரத்திலேயே சிறுமியின் மூக்கிலிருந்து சிவப்பு நிறத்தில் சளி வெளிவந்துள்ளது. இதனை தொடர்ந்து வாந்தி எடுக்க தொடங்கிய அந்த சிறுமி மயங்கி விழுந்துள்ளார். மேலும் அவருடைய உடல் முழுவதும் நீல நிறமாக மாறி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவரை மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்துள்ளனர்.
ஆனால் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சிறுமியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சிறுமி குடித்த கூல்ட்ரிங்ஸ் கைப்பற்றி ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிறுமி குளிர்பானம் குடித்ததால் உயிரிழந்தாரா?அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அனைத்து கடைகளிலும் விற்கப்படும் உணவுப் பொருட்களில் காலாவதியான தேதி இடம் பெற்றிருக்க வேண்டும்.
காலாவதியான உணவுப் பொருட்களை சாப்பிடக்கூடாது, விற்கவும் கூடாது என்று சட்டம் இருக்கும் நிலையில் பல கடைகளில் இதுகுறித்து பின்பற்றுவதே கிடையாது. தரமான பொருட்களை விற்க வேண்டும் என்று அரசு, கடைகளுக்கு உத்தரவு விட்டாலும் பெரும்பாலான கடைகளில் அதை சரியாக பின்பற்றுவது கிடையாது .அலட்சியமாக இருந்து விடுகின்றனர். இதனால் இதுபோன்ற துயரமான சம்பவங்கள் நடைபெறுவதால் பெற்றோர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.