Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. கேக் என்று நினைத்து எலி மருந்து சாப்பிட்ட சிறுமி பலி…. அதிர்ச்சி சம்பவம்….!!!

காரைக்காலில் கேக் என்று நினைத்து எலி மருந்தை சாப்பிட்ட 14 வயது சிறுமி சலேத் நிதிக்‌ஷனா உயிரிழந்தார். ஏழாம் வகுப்பு வரை படித்திருக்கும் அவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தசை சுருக்க நோயால் பாதிக்கப்பட்டதால் இப்போது வரை அவரால் சரியாக நடக்க முடியவில்லை. நோய் பாதிப்பு காரணமாக இவரால் சரியாக நடக்க இயலாமல் சுவரைப் பிடித்துக் கொண்டு மெதுவாக நடப்பார்.

இந்நிலையில் திடீரென்று நேற்று வாந்தி எடுத்துள்ளார். இதனை விசாரித்த போது கேக் என்று நினைத்து எலி மருந்தை சாப்பிட்டது தெரிய வந்தது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |