Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. சர்க்கரை என நினைத்து இதை சாப்பிட்ட சிறுமி…. இறுதியில் நேர்ந்த அவலம்….!!!!

தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை மேலூர் ரோடு குடிநீர் தொட்டி கீழ்புரம் சீதா ராஜ் மற்றும் பிரேமா தம்பதியினர் வசித்து வருகின்றனர். கூலி தொழிலாளியான இவரின் இரண்டாவது மகள் இசக்கியம்மாள் (5) கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அருகில் உள்ள ஒரு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வீட்டில் இருந்த ப்ளீச்சிங் பவுடரை சர்க்கரை என்று நினைத்து அந்தக் குழந்தை சாப்பிட்டு உள்ளது. அதனால் துடிதுடித்துப் போன இசக்கியம்மாளை கண்டு பதறிப்போன வீட்டுக்காரர் உடனடியாக குழந்தையின் தந்தைக்கு தகவல் அளித்தார்.

அதன்பிறகு தென்காசியில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டது. அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து குழந்தையை காப்பாற்றினர். இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு குழந்தையை வீட்டுக்கு அழைத்து வந்தனர். ஆனால் நாளுக்கு நாள் குழந்தையின் உடல் மெலிந்து கொண்டே வருகிறது. ப்ளீச்சிங் பவுடரை சாப்பிடுவதற்கு முன் அழகாக இருந்த இசக்கியம்மாள் தற்போது உடல் மெலிந்து பரிதாபமாக காட்சி அளிக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் உணவு சாப்பிட முடியாமல் குழந்தை அவதிப்பட்டு வருகிறது. திரவ உணவு மட்டுமே குடிக்க முடிகிறது. மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறது குழந்தை. ப்ளீச்சிங் பவுடர் சாப்பிட்டதால் குழந்தைக்கு இந்த நிலை ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தங்களிடம் போதிய பண வசதி இல்லாததால் குழந்தையின் தந்தை சரிவர குழந்தையை கவனிக்க முடியாமல் பரிதவித்து நிற்கிறார்.

இந்த தகவல் செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ் கண்ணனுக்கு தெரியவந்தது. அவர் குழந்தையின் நிலையை அறிந்து மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து வருகிறார். இதையடுத்து பெற்றோர்கள் குழந்தைகளை கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |