உத்திரப்பிரதேச மாநிலத்தில் 12 வயது சிறுவன் முகத்தில் செல்போன் பேட்டரி வெடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். செல்போன் என்பது தங்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்துகின்றனர். ஆனால் அதில் ஏற்படும் சில விபரீதங்கள் பற்றி யாரும் அறிவதில்லை. பெரும்பாலும் அதனால் பாதிக்கப்படுவது குழந்தைகள் மட்டுமே. இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் 12 வயது சிறுவனின் முகத்தில் செல்போன் பேட்டரி வெடித்து சிதறியதால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த சிறுவன் மொபைல் போன் பேட்டரியை தனியாக சார்ஜ் செய்யும் யுனிவர்சல் சார்ஜரை பயன்படுத்தி ரீசார்ஜ் செய்துள்ளான். அதன் பிறகு ஒரு மணி நேரம் கழித்து பேட்டரி சார்ஜ் ஆகி உள்ளதா என அறிய நாக்கை பேட்டரியில் வைத்துள்ளான். அப்போது பேட்டரி வெடித்து சிறுவன் முகம் சிதைந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தான். அதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சற்று கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.