Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்… ஜூஸ் குடித்த குழந்தை மரணம்… சோகம்…!!!

முசிறி அருகே ஜூஸ் என்று நினைத்து மண்ணெண்ணையை குடித்து குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முசிறி அருகே காமாட்சி பட்டி என்ற பகுதியில் சதீஷ்குமார் மற்றும் சுகன்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். சதீஷ்குமார் ஒரு கூலித் தொழிலாளி. அந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஜீவா என்ற குழந்தை உள்ளது. அந்த குழந்தையின் கடந்த 3ஆம் தேதி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் ஜூஸ் என்று நினைத்து, மண்ணெண்ணையை குடித்துள்ளது. அதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |